பிரான்சில் தேடப்பட்ட யாழ்ப்பாண குடும்பஸ்தர் உயிரிழப்பு!

0
105

கடந்த சில வாரங்களிற்கு முன்பு பிரான்ஸில் காணாமல் போனதாக குடும்பத்தராலும், பொலீஸாராலும் தேடப்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரான்ஸ் – பாரிஸ் பிராந்தியத்தில் வசித்து வந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் காணாமல் போயிருந்தார்.

கடந்த சில நாட்களின் முன்னை இல் து பிரான்ஸ் பிராந்தியத்தின் வில்யுப் நகரில் வசித்து வந்த 41 வயதான யாழ் குடும்பஸ்தரை  காணவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் காணாமல் போனவரின், மனைவி பிள்ளைகள் யாழ்ப்பாணம் மல்லாகத்தில் வசித்து வரும் நிலையில், தனது கணவனை கண்டுபிடித்து தருமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

வதிவிட விசா கிடைக்காத நிலையில், குறித்த நபர் பல தமிழ் வர்த்தக நிலையங்களில் பணியாற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை காணாமல் போன நபர் இறுதியாக தான் இருந்த வீட்டு உரிமையாளருடன் முரண்பட்டு விட்டுச் சென்ற நிலையிலேயே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.