ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; அச்சத்தில் பொதுமக்கள்!

0
352

ஜப்பானின் ஹொக்கைடோவில் நேற்று மாலை 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தை மேற்கோள் காட்டி தகவல் வெளியாகியுள்ளது.

சனிக்கிழமை இரவு வடக்கு ஜப்பானில் உள்ள ஹொக்கைடோவில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இது கடலோர நகரங்களை உலுக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; அச்சத்தில் பொதுமக்கள்! | Powerful Earthquake In Japan Public In Fear

ஹொக்கைடோவின் கிழக்குப் பகுதியில் இரவு 10:27 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று ஜப்பான் வானிலை ஆய்வு மையம் கூறியது.

மேலும் நிலநடுக்கத்தை அடுத்து ஏற்பட்ட சேத விபரங்கள் வெளியாகவில்லை. குஷிரோ கடற்கரையில் பசிபிக் பெருங்கடலில் 60 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.