யார் இல்லை என்றாலும் நாம் இருப்போம்; புட்டினுடன் கைக்கோர்த்த பெலாரஸ்!

0
248

ரஷ்யா – உக்ரைன் இடையிலான போரில் வேறொரு நாடு ரஷ்யா மீது தாக்குதல் நடத்தினால் மட்டுமே பெலாரஸ் சண்டையில் பங்கேற்கும் என அந்நாட்டின் அதிபரான அலெக்சாண்டர் லூகாஷென்கோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று நடைபெற்ற செய்தி மாநாட்டில் பேசிய அவர் பெலாரஸ் மக்களை கொல்லும் நோக்கில் ஒரு சிப்பாய் வந்தால் கூட நான் ரஷ்யர்களுடன் இணைந்து சண்டையிட தயாராக இருக்கிறேன் எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் பெலாரஸ் மீது ஆக்கிரமிப்பு செய்தால் பதில் மிகவும் கடுமையாக இருக்கும் எனத் தெரிவித்த அவர், போர் முற்றிலும், மாறுபட்ட தன்மையைக் கொண்டிருக்கும் எனவும் அவர் கூறினார்.

உக்ரைன் – ரஷ்யா போரில் மேற்கத்தைய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தாலும் பெலாரஸ் ஆதரவான நிலைப்பாட்டை கொண்டிருந்தது. இது மேற்கத்தைய நாடுகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.