பச்சை நிற கருவுடன் முட்டையிடும் கோழிகள்! அதிசயத்திற்கு காரணம் தெரியுமா?

0
322

கேரளாவின் மலப்புரத்தில் உள்ள ஒரு பண்ணையில் கோழிகள் இடும் முட்டைகளின் மஞ்சள் கரு பச்சை நிறத்தில் உள்ள சம்பவம் ஆச்சியத்தினை அளிக்கின்றது.

முட்டையில் பச்சை கரு

கேரளாவில் மலப்புரத்தில் ஏ.கே.ஷிஹாபுதீன் என்பவரின் பண்ணையிலேயே இந்த அதிசயம் நடைபெற்று வருகின்றது.

இந்த சம்பவம் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது. அந்தக் கோழிகளுக்கு அளிக்கப்பட்ட தீவனம் இந்த மாற்றத்துக்குக் காரணமாக இருக்கலாம் வேறு தையும் அவை உட்கொண்டிருக்கலாம் என கேரள கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

பண்ணைக்குச் சென்று ஆய்வுக்காக அவற்றின் மாதிரிகளையும் சேகரித்துள்ளனர். கோழிப்பண்ணை அறிவியல் துறையின் உதவிப் பேராசிரியர் டாக்டர் எஸ். சங்கரலிங்கம், “முட்டையின் மஞ்சள் கருவில் உள்ள பச்சை நிறம் எந்த மரபணுக் கோளாறாலும் ஏற்படவில்லை” என்று தெரிவிக்கிறார்.

பச்சை கருவுடன் முட்டையிடும் கோழிகள்! அதிசயத்திற்கு உண்மை காரணம் என்ன? | Chickens Lay Eggs With Green Yolks

கோழிகளுக்கு பல்கலைக்கழகத்தில் இருந்து தீவனம் வழங்கப்பட்டது. அதைச் சாப்பிட்ட இரண்டு வாரங்களில் கோழிகள் பச்சை நிற மஞ்சள் கருவுடன் முட்டைகள் இட ஆரம்பித்துள்ளன. ஆனால் உரிமையாளர் வேறு எந்த வித்தியாசமான தீவனமும் கொடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.

“கோழிகளின் கொழுப்பு படிவுகளில் பச்சை நிறமி இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்ததால், அது ‘கொழுப்பில் கரையக்கூடியதாக’ இருக்க வேண்டும்” என்று டாக்டர் சங்கரலிங்கம் கூறுகிறார்.

ஒருவேளை மூலிகைத் தாவரங்களை உட்கொள்வதும் நிறமாற்றத்துக்கு காரணமாக இருக்கக்கூடும் என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Gallery