துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கிய இளைஞரை காப்பாற்றிய வாட்ஸ்அப் வீடியோ!

0
370

துருக்கியில் நிலநடுக்கத்தில் சிக்கிய 20 வயதான குபாத் எனும் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் வாட்ஸ்அப்பில் வீடியோ ஸ்டேட்டஸ் மூலம் தனது இருப்பிடத்தை பகிர்ந்த நிலையில் அவர் மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குபாத் என்ற மாணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மாலத்யாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கினர். இதனையடுத்து வாட்ஸ்அப்பில் வீடியோ ஸ்டேட்டஸ் மூலம் தான் இடிபாடுகளில் சிக்கிய தகவலை அவர் வெளியிட்டார்.

தனது தாயின் உடல்நிலை நன்றாக இருப்பதாகவும் அவர்கள் இரண்டாவது மாடியில் உள்ள எஃப்ரூஸ் அடுக்குமாடி குடியிருப்பில் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கி இருப்பதாகவும் குபாத் கூறினார்.

என்னால் என் மாமா எங்கிருக்கிறார் என்பது சரியாக தெரியவில்லை என்றும் அவர் காணொளியில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து அவசர சேவை பிரிவினர் குபத்தை கண்டுபிடித்ததுடன் தாயுடன் அவர் மீட்கப்பட்டார்.

இருப்பினும் அவரது மாமா மற்றும் பாட்டி இன்னும் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கியனர். பின்னர் அனடோலு ஏஜென்சியிடம் பேசிய குபத் தனது ஓய்வு நேரத்தை தனது குடும்பத்துடன் கழிப்பதற்காக மீண்டும் மாலத்யாவுக்கு வந்ததாகக் கூறினார்.

இரவு உறங்கச் சென்ற பிறகு முதல் நிலநடுக்கத்தில் அவரது குடும்பத்தினர் சிக்கியதாக குபாத் கூறினார்.

துருக்கி பூகம்பத்தில் சிக்கிய இளைஞரை காப்பாற்றிய வாட்ஸ்அப் வீடியோ ! | Whatsapp Video That Saved The Turkey Earthquake

நிலநடுக்கத்தின் போது நாங்கள் தூங்கிக் கொண்டிருந்தோம். அப்போது திடீரென குலுங்கியது. நான் கண்களைத் திறந்தவுடன் என் தலையைத் தாழ்த்தி பார்த்தேன். என் அம்மா என் அருகில் விழுந்ததைக் கண்டேன். தனது தொலைபேசி தன்னிடம் இருந்ததாக கூறினார். உடனடியாக அதை எடுத்து தனது நண்பர்களை அழைக்க முயற்சி செய்ததாக கூறினார்.

துருக்கி பூகம்பத்தில் சிக்கிய இளைஞரை காப்பாற்றிய வாட்ஸ்அப் வீடியோ ! | Whatsapp Video That Saved The Turkey Earthquake

என்னுடைய நண்பர்கள் அனைவரும் என வாட்ஸப் ஸ்டேடஸைப் பார்த்தால் அதை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டால் அவர்கள் அனைவரும் தன்னை காப்பாற்ற வரலாம் என்று தான் நம்பியதாக அவர் கூறினார்.

அவர் ஐந்தரை முதல் ஆறு மணி நேரம் வரை இடிபாடுகளுக்கு அடியில் இருந்ததாகவும் அவரது நண்பர்கள் ஸ்லெட்ஜ்ஹாம்மரைப் பயன்படுத்தி இடிபாடிகளின் மீது சரியான இடத்தைத் கண்டுபிடித்து அவரையும் அவரது குடும்பத்தினரையும் மிட்பு பணியாளர்கள் மீட்டதாகவும் குபாத் கூறினார்.