முடி கருகருவென செழித்து வளர பாட்டி வைத்தியம்…

0
341

இன்றைய காலத்தில் முடி உதிர்தல் என்பது நம்மில் பலர் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினையாக மாறிவிட்டது.

வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்கள் ஆரோக்கியமற்றதாக இருப்பது இதற்கு காரணமாக கருதப்படுகின்றது.

அதற்காக அழகு நிலையங்களுக்கு சென்று பராமரிப்பு கொடுக்க வேண்டுமென்பதில்லை. வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே முடியை பராமரித்து, கருமையான முடியை நிலைக்க வைக்கலாம்.

இதற்கு ஒரு சில இயற்கை வழிகள் உதவுகின்றது. தற்போது ஒரு சூப்பரான ஒரு இயற்கை முறையை இங்கே பார்ப்போம்.   

தேவையானவை

  • ஔரி இலை – 50 கிராம்
  • மருதாணி இலை – 50 கிராம்
  • வெள்ளை கரிசலாங்கண்ணி – 50 கிராம்
  • கறிவேப்பிலை – 50 கிராம்
  • பெருநெல்லி (கொட்டை நீக்கியது) – 10 எண்ணிக்கை.

செய்முறை

முடி கருகருவென செழித்து வளரனுமா? இந்த இலையை இப்படி பயன்படுத்தி பாருங்க | Does The Hair Grow Like A Fetus

இவை அனைத்தையும் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

ஒரு மடல் சோற்றுக் கற்றாழையை மிக்ஸியில் அரைத்து ஔரி கலவையுடன் சேர்த்து,

ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயுடன் கலந்து மிதமான தீயில் காய்ச்ச வேண்டும்.

கொதி நிலைக்கு வரும்போது இறக்கி வடிகட்ட வேண்டும்.

இதை பத்திரப்படுத்தி வைத்து, தினசரி தலைக்கு எண்ணெய் பூசுவது போல பயன்படுத்தலாம்.

நாளடைவில் முடியின் நிறம் மாறுவதோடு புதிதாகவும் முடி வளரும்