உடல் எடை அதிகரிப்பது நம்மில் பலருக்கு உள்ள மாபெரும் பிரச்சனையாக உள்ளது. ஆரோக்கியமான உணவுமுறை உடல் எடையைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது. ஆனால் ஆரோக்கியமான டயட்டை பின்பற்றுவது பலருக்கு மிக கடினமாக இருக்கிறது.
எளிய மற்றும் பயனுள்ள குறிப்புகள்

விரைவாக உடல் எடையை குறைக்க விரும்பினால் எப்போதும் குளிர் சாதன பெட்டியில் சில ஆரோக்கியமான பொருட்களை வைத்திருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
சில நேரம் ஏதாவது சாப்பிட வேண்டும் என்ற ஆசை பிறக்கும் அப்படிப்பட்ட நேரங்களில் நாம் உட்கொள்ளும் ஆரோக்கியமற்ற உணவுகள்தான் நம் உடல் எடை அதிகரிக்க காரணமாகின்றன.

புதிய பழங்கள், காய்கறிகள் அல்லது பிற ஆரோக்கியமான உணவுகளை வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.
முட்டை
முட்டையில் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதாக பல ஆய்வுகள் நமக்கு எடுத்துக்காட்டியுள்ளன. முட்டை கொண்டு பல ஆரோக்கியமான தின்பண்டங்களையும் செய்யலாம். இதன் மூலம் ஆரோக்கியமான வழியில் வயிறு நிரம்பும்.

காய்கறிகள்
எடை இழப்புக்கு காய்கறிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதில் அதிக அளவில் காணப்படுகின்றன. சாலட்டாகவும் சைட் டிஷ் ஆகவும் இவற்றை உட்கொள்ளலாம்.

பருவகால பழங்கள்
இனிப்புகளை சாப்பிட விரும்பினால், சாக்லேட் அல்லது இனிப்பு பதார்த்தங்களுக்கு பதிலாக, பருவகால பழங்களை சாப்பிடலாம். எடையைக் குறைப்பதில் பழங்கள் அற்புதமான விளைவைக் கொண்டிருப்பது பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

உயர் புரத தின்பண்டங்கள்
புரதச்சத்து நிறைந்த உணவுகள் எடையைக் கட்டுப்படுத்தவும் பெரிதும் உதவுகின்றன. காட்டேஜ் சீஸ், யோகர்ட் போன்றவற்றை உங்கள் குளிர்சாதன பெட்டியில் எப்போதும் வைத்திருங்கள். இவற்றால் சுவையும் சேரும், எடையும் விரைவில் குறையும்.

சாலட்
பல்வேறு வகையான உயர்தர சாலட் சாப்பிடுவதால் நீங்கள் சுவையான உணவுடன் எடையை குறைக்கும் உணவையும் உட்கொண்ட திருப்தி உங்களுக்கு கிடைக்கும். சாலடுக்கு ஏற்ற காய்களை எப்போதும் ஃபிரிட்ஜில் வைத்திருப்பது மிக நல்லதாகும்.
