உள்ளூராட்சி மன்ற தலைவர்களை இடைநிறுத்த புதிய சட்டம்!

0
380

இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான உள்ளூராட்சி சபைகளின் தலைவர்களின் பதவிகளை இடைநிறுத்துவதற்கு புதிய சட்ட ஏற்பாடுகளை கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான சட்ட ஏற்பாடுகள் விரைவில் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்படும் என உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போதுள்ள சட்டத்தின் கீழ் இலஞ்ச குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டாலும் அது நிரூபிக்கப்படும் வரை மேயர்கள் மற்றும் உள்ளுராட்சி சபை தலைவர்கள் பதவியில் இருக்க அனுமதிக்கப்படுவதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.