
தந்தையும் மகளும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சமபவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இவர்கள் பொலன்னறுவை தம்பால கும்புக்கன் ஆற்றில் தவறி விழுந்ததில் இச் சமபவம் நிகழ்ந்துள்ளது.
கும்புக்கன் ஆற்றை பார்வையிடுவதற்காக நேற்று காலை சென்ற போதே அவர்கள் இந்த அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
சம்பவம்
செல்பி எடுப்பதற்கு முயற்சித்த குறித்த சிறுமி ஆற்றுக்குள் தவறி வீழ்ந்துள்ளார். அவரை காப்பாற்றுவதற்கு தந்தை முயற்சித்த போது இருவரும் நீரில் அள்ளுண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போன தந்தையையும் மகளையும் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார் உட்பட்ட குழுவினர் நீரில் மூழ்கிய தந்தையும் மகளும், ஆற்றில் விழுந்த இடத்திலிருந்து சுமார் இரண்டு கிலோமீற்றர் தொலைவில் உள்ள பரணகம பிரதேசத்தில் சடலங்களாக மீட்டனர்.
மட்டக்களப்பு காத்தான்குடியை சேர்ந்த 46 வயதான தந்தையும் 12 வயதான மகளுமே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.