தினேஷ் மரணம் தொடர்பில் அதிர்ச்சி; தகவல்களை வெளியிட்ட தந்தை!

0
439

கடந்த டிசம்பர் மாதம் கொழும்பில் மர்மமான முறையில் உயிரிழந்து பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் சாப்டரின் மரணம் குறித்து அவரது தந்தை உருக்கமான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

தினேஷ் சாப்டரின் மரணம் தொடர்பில் அவரது தந்தை சந்திரா சாப்டர் வெளியிட்ட தகவலில்,

“எனது மகனின் மரணம் எவ்வாறு நிகழ்ந்தது இறப்பிற்கு என்ன காரணம் என எனது நண்பர்கள் எனக்கு தெரிந்தவர்கள் என்னை அறியாதவர்கள் உட்பட பலர் என்னிடம் கேட்டுள்ளனர். டிசம்பர் 15ம் திகதி அன்று நான் எனது மகனை வழியனுப்பிவைப்பதற்காக பார்க்க சென்றேன்.

அவர் அன்று மாலை 4.00 மணிக்கு குடும்பத்தவர்களுடன் பிரிட்டன் செல்வதற்கு திட்டமிட்டிருந்தார். அவர் தனது பிள்ளைகளை அங்குள்ள பாடசாலைகளில் சேர்ப்பதற்கு திட்டமிட்டிருந்தார். அவர் விடுமுறையில் செல்லவில்லை அவர் தனது குடும்பத்தினருக்கான வதிவிட அனுமதி குறித்த விடயங்களிற்காக அங்கு செல்ல திட்டமிட்டார்.

அவருக்கு வதிவிட அனுமதியிருந்தது. அவர் அன்று நல்ல உணர்விலிருந்தார், அவரும் மனைவியும் என்னுடன் அமர்ந்து வழமை போல வேடிக்கை பேச்சில் ஈடுபட்டார்கள் சிரித்தார்கள். நான் மதியமளவில் அங்கிருந்து புறப்பட்டேன். அவர் தான் ஒரு அவசர சந்திப்பிற்காக செல்லவேண்டியுள்ளது என எனக்கு தெரிவித்தார்.

அவர் இயல்பான தொனியிலேயே அதனை தெரிவித்தார். அவர் பதற்றமாகயிருப்பதாக நான் உணரவில்லை. அவருடனான அன்றைய சந்திப்பை அடிப்படையாக வைத்து அவர் தனக்கு ஆபத்துள்ளது என கருதவில்லை என்ற முடிவிற்கு என்னால் வரமுடியும். இதன் காரணமாக அதன் பின்னர் நடந்த விடயங்கள் எனக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தன.

தனது மரணத்திற்கான சூழ்ச்சி குறித்து அவருக்கு சிறிதளவு தெரிந்திக்கவில்லை என நான் கருதுகின்றேன். அவரை தெரிந்தவர்களிற்கு தினேஷ் மிகவும் மென்மையான இரக்க குணம் கொண்டவர் என்பது தெரியும். அவர் தனது குடும்பம் நண்பர்கள் குறித்து மிகவும் அர்ப்பணிப்புடன் காணப்பட்டார். உறவுகளை மிகவும் மதித்தார். குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்கள் நன்றாக மாத்திரமின்றி மகிழ்ச்சியாக இருப்பதை உறுதி செய்வதை தனது கடமையாக அவர் கருதினார்.

அவ்வாறான மகிழ்ச்சி காணப்படாவிட்டால் அதனை கண்டுபிடிக்கும் திறன் உள்ளவராக அவர் காணப்பட்டார், அதனை மாற்றுவதற்காக தன்னால் முடிந்தளவிற்கு செயற்பட்டார். தனக்கு பல வேலைகள் இருந்தபோதிலும் ஏனையவர்களிற்காக நேரத்தை செலவிட்டார். தினேஸ் தனது குடும்பத்தை அளவுக்கதிகமாக நேசித்த கணவனாக தந்தையாக காணப்பட்டார். அவரது வாழ்க்கை அவரது குடும்பத்தை சுற்றியே காணப்பட்டது.

வர்த்தகர் தினேஷ் மரணம் தொடர்பில் அதிர்ச்சியளிக்கும் தகவல்களை வெளியிட்ட தந்தை! | The Father Disclosed Death Businessman Dinesh

அவர் தனது உணர்வுகளை வெளிப்படுத்தும் திறன் கொண்டவர் தனது பிள்ளைகள் உறவினர்களிடம் எல்லையற்ற அன்பை வெளிப்படுத்தினார். அவர் குடும்பத்தவர்கள் ஒன்றாக நேரத்தை செலவிடுவதை உறுதி செய்தார். அவர் குடும்ப நிகழ்வுகளை ஒருபோதும் தவறவிட்டதில்லை தானாகவே அவற்றை ஒழுங்குசெய்வார். அவர் எங்களின் குடும்பத்தி;ன் ஆன்மா இதயமாக விளங்கினார். நாங்கள் அவரை இழந்து தவிக்கின்றோம்.

அவர் நம்பிக்கைக்குரியவர் என்பதால் அனைவரையும் நம்பினார் முன்பின்னர் அறியாதவர்களிற்கு கூட நல்ல விடயங்களை செய்தார். முன்பின் அறியாதவர்கள் மழையில் நனைந்தால் தனது காரிலிருந்து இறங்கி குடையை பிடித்து செல்வார். அரகலயவின் போது கண்ணீர்புகை பிரயோகத்திற்குள்ளான 200க்கும் அதிகமான ஆர்ப்பாட்டக்காரர்கள் தப்புவதற்காக தயக்கம் இன்றி தனது வாயில்கதவுகளை திறந்துவிட்டார்.

அவர் உயிரிழந்த அன்று காலை தனது சகா ஒருவருக்கு அனுப்பியுள்ள குறுஞ்செய்தியில் இலங்கை டெனிஸ் சங்கத்திற்காக பணியாற்றுபவர்கள் மோசமான இடத்தில் வாழ்கின்றனர். அவர்களது அந்த நிலையை மாற்றுவதற்கு நான் என்னால் முடிந்ததை செய்ய தயார் என குறிப்பிட்டிருந்தார். நீதிமன்றங்களில் தங்களிற்காக வாதாடுவதற்காக சட்டத்தரணிகளை அமர்த்த முடியாதவர்களிற்காக சட்டஉதவி வழங்குவதற்கு அவர் ஆதரவளித்தார்.

அபராதம் கட்ட முடியாததால் சிறைத்தண்டனை அனுபவிப்பவர்களுக்காக அபராதம் செலுத்தினார். இதுதான் தினேஷ். அவர் குடும்பத்தவர்கள் மற்றும் நண்பர்களிடம் தாராள குணம் மிக்கவராகவும் அன்பானவராகவும் காணப்பட்டார். அவர் சாதாரண வாழ்க்கையை வாழ்ந்தார், பெரும்பாலும் அவர் எளிமையான வாழ்க்கை முறையை வாழ்ந்தார். பெரும்பாலும் அவரது வெளிர் நீல குட்டை கை சட்டை மற்றும் தோல் செருப்புகளில் காணப்பட்டார்.

அவர் சம்பிரதாயத்தையும் முறையான ஆடைகளையும் விரும்பவில்லை. அவர் டை அணிவதை முற்றிலும் வெறுத்தார் மற்றும் முறையான சந்தர்ப்பங்களுக்கு மட்டுமே அவர் காலணிகளை அணிந்திருந்தார். தினேஷ் மிகவும் தனிப்பட்ட நபராகவும் இருந்தார். அவர் தன்னை வெளிச்சத்தில் இருந்து அகற்றுவதில் தீவிரமாக பணியாற்றினார். அவரது மரணத்தைச் சுற்றியுள்ள விளம்பரம் அவரை “அவரது கல்லறையில் திருப்ப” செய்யும் என்று எனக்குத் தெரியும்.

கனிவான மற்றும் மென்மையான உள்ளம் கொண்ட எனது இளைய மகனை நான் இழந்துவிட்டேன். பலரது வாழ்க்கையைத் தொட்டவர் தொடர்ந்து வரும் அஞ்சலிகளில் இருந்து நாம் கண்டுபிடித்து வருகிறோம். அவர் வாழ்ந்தவர் வாழ்ந்தவர் என்று பெருமைப்படுவதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும். வாழ்க்கை அவனிடமிருந்து சீக்கிரமே கொள்ளையடிக்கப்பட்டாலும் அவனுடைய தாக்கம் இன்னும் பல ஆண்டுகளாக நினைவில் இருக்கும் என்று எனக்குத் தெரியும்.

இவை தினேஷின் மரணம் மற்றும் தினேஷ் நபர் பற்றிய உண்மைகள். ஈவிரக்கமற்ற கொலைக்கு ஆளான ஒரு நல்ல மகனின் பெயரையும் மனித இனத்தையும் கெடுக்கும் நோக்கத்தில் ஊகப் பொய்களில் ஈடுபட வேண்டாம் என்று ஊடகங்களுக்கும் பொதுமக்களுக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.