கால்பந்து வரலாற்றில் கறுப்பு தினம்!

0
103

விமான விபத்தில் கால்பந்து வீரர்கள் உட்பட 23 பேர் பலியான சம்பவத்தை பாயர்ன் முனிச் அணி நினைவுகூர்ந்துள்ளது.

சோக சம்பவம்

கடந்த 1958 ஆண்டு பிப்ரவரி 6ஆம் திகதி, புகழ்பெற்ற கிளப் அணியான மான்செஸ்டர் யுனைடெட் பஸ்பி பேப்ஸ்-யின் வீரர்கள் பயணித்த விமானம் விபத்தில் சிக்கியது.

இந்த விபத்தில் 23 பேர் பலியாகினர்.இதனால் இந்த சோக சம்பவம் கால்பந்து வரலாற்றில் ஒரு கறுப்பு நாள் என்று கூறப்படுகிறது.

சிறப்பான பிணைப்பு

இந்த விபத்து முனிச்-ரீம் விமான நிலையத்தில் நிகழ்ந்துள்ளது.

இது நடந்து 65 ஆண்டுகள் ஆன நிலையில், இந்த சோக சம்பவம் நட்பு மற்றும் நல்லிணக்கத்தையும் பிரதிபலிப்பதாக ஜேர்மனின் கிளப் அணியான பாயர்ன் முனிச் தெரிவித்துள்ளது.

கால்பந்து வரலாற்றில் கறுப்பு தினம்! 23 உயிர்கள் பலியான துயர சம்பவம் | Players Of Manchester United Busby Babes Death

மேலும், அந்த சம்பவத்திற்கு பிறகு மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் பாயர்ன் முனிச் ஆகிய இரண்டு கிளப்புகளுக்கு இடையே உருவான சிறப்பான பிணைப்பு இன்றுவரை உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.