கொழும்பு சுங்கத்திற்குள் சிக்கியுள்ள அதிசொகுசு கார்கள்; அமைச்சர் பிறப்பித்துள்ள உத்தரவு

0
398

கொழும்பு துறைமுகத்தின் களஞ்சியசாலையில் உள்ள 400 கோடி ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் தேங்கியிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவற்றினை பொறுப்பேற்று ஒரு வாரத்திற்குள் அகற்றுமாறு துறைமுக அதிகாரசபைக்கு உத்தரவிட்டதாக துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, சுங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்த பொருட்களில் உள்ள சொகுசு வாகனங்களின் பெறுமதி மாத்திரம் 100 கோடி ரூபாவிற்கும் அதிகம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பல வருடங்களாக சுங்கத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் கொள்கலன்கள் தடுத்து வைக்கப்படுவதனால் அரசாங்கத்திற்கு பாரிய தொகை நஷ்டம் ஏற்பட்டுள்ள நிலையில், காலாவதியான சுங்கச் சட்டம் இன்றைய நிலைமைக்கு ஏற்றவாறு உடனடியாக திருத்தம் செய்யப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

2015 ஆம் ஆண்டு கைப்பற்றப்பட்ட சொகுசு பென்ஸ், ரேஞ்ச் ரோவர் மற்றும் 15 வாகனங்கள், 15 டைல் கொள்கலன்கள் மற்றும் பல அடங்கியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

நாடு பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள வேளையில், 39 பாசுமதி அரிசி கொள்கலன்கள் துறைமுகத்தில் மூன்று வருடங்களாக விடுவிக்கப்படாமல் வைத்திருந்ததால், அந்த அரிசி பயன்படுத்த முடியாத அளவிற்கு பழுதடைந்துள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.