காலி முகத்திடலில் தமிழில் ஒலித்த தேசிய கீதம்!

0
121

நேற்று காலி முகத்திடலில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வில் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் தேசிய கீதம் பாடப்பட்டது.

இன நல்லிணக்கம் மற்றும் அதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சுதந்திர தின நிகழ்வு இடம்பெற்றது.

கோட்டாபய அரசாங்கத்தில் புறக்கணிப்பு

அதேவேளை 2015 முதல் 2019 வரையான நல்லாட்சி அரசாங்கத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்தபோது தேசிய நிகழ்வுகளின் தமிழ் மொழியில் தேசிய கீதம் படப்பட்டபோதும் கோட்டாபய அரசாங்கத்தில் அது புறக்கணிக்கப்பட்டது.

காலி முகத்திடலில் தமிழில் ஒலித்த தேசிய கீதம்! | National Anthem Played In Tamil Srilanka

இந்நிலையில் தேசிய சுதந்திர தின நிகழ்வின் இறுதியில் மேல் மாகாணத்தில் உள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களால் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.