உக்ரைன் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட ரஷ்ய முன்னாள் தளபதி!

0
366

உக்ரைன் மக்களிடம் ரஷ்யாவின் முன்னாள் கூலிப்படை தளபதி ஒருவர் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.

உக்ரைன் மக்களுக்கு எதிராக போரிடும் சூழல் உருவானது தொடர்பில் தாம் வருந்துவதாகவும் போரில் அட்டூழியங்களில் ஈடுபட்டவர்களை நீதியின் முன் நிறுத்துங்கள் எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

கடந்த மாதம் ஜனவரி 13ம் திகதி ரஷ்ய – நார்வே எல்லையை கடந்த ஆண்ட்ரி மெத்வெதேவ், வாக்னர் கூலிப்படைக்காகப் போராட உக்ரைனுக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரஷ்ய கைதிகள் கொல்லப்பட்டதையும் தவறாக நடத்தப்பட்டதையும் நேரில் பார்த்ததாகக் கூறியுள்ளார்.

உக்ரைன் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட ரஷ்ய முன்னாள் தளபதி! | Former Russian General Apologized People Ukraine

நார்வே எல்லையை கடக்க தாம் பட்ட பாடுகளை வெளிப்படுத்திய மெத்வெதேவ், முட்கம்பி வேலிகள் வழியாக ஏறி, நாய்களுடன் எல்லை ரோந்து வீரர்களை தவிர்த்து, காடு வழியாகவும் உறைந்த ஆற்றின் வழியாகவும் ஓடும்போது காவலர்கள் துப்பாக்கிச்சூடு நடத்துவதைக் கேட்க முடிந்தது என்றார்.

26 வயதேயான மெத்வெதேவ் தற்போது நார்வே நாட்டில் அடைக்கலம் கோரியுள்ளார்.

உக்ரைன் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட ரஷ்ய முன்னாள் தளபதி! | Former Russian General Apologized People Ukraine

பலர் தம்மை அயோக்கியன், குற்றவாளி, கொலைகாரன் என அடையாளப்படுத்தலாம் என குறிப்பிட்டுள்ள மெத்வெதேவ், தற்போதைய சூழலில் தன்னால் மன்னிப்பு மட்டுமே கேட்க முடியும் எனவும், தற்போது தாம் புதிய வாழ்க்கையை வாழ விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

நார்வே நாட்டின் குற்றவியல் சிறப்பு பொலிஸ் சேவை உக்ரைனில் போர் குற்றங்கள் தொடர்பில் விசாரணை முன்னெடுத்து வருகிறது. இதில் முக்கிய சாட்சியாக தற்போது மெத்வெதேவ் சேர்க்கப்பட்டுள்ளார்.

உக்ரைன் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட ரஷ்ய முன்னாள் தளபதி! | Former Russian General Apologized People Ukraine

உக்ரைனில் தாம் நேரில் பார்த்த, அனுபவித்த கொடூரங்களை அவர் இந்த விசாரனையில் வெளிப்படுத்துவார் என்றே கூறப்படுகிறது.

ஆனால் வாக்னர் கூலிப்படையின் நார்வே பிரிவில் மெத்வெதேவ் செயல்பட்டதாகவும், போர் கைதிகளை மெத்வெதேவ் கொடூரமாக நடத்தியுள்ளார் எனவும் வாக்னர் கூலிப்படையின் நிறுவனரான Yevgeny Prigozhin சமீபத்தில் குற்றஞ்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.