மனைவியுடனான கோபம்; மலைப்பாம்பின் தலையை கடித்து துப்பிய கணவன்

0
105

ஃபுளோரிடாவில் மனைவியுடன் சண்டையிட்டபோது மலைப்பாம்பின் தலையை கணவன் கடித்து துப்பிய வினோத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலைப்பாம்பின் தலையை கடித்து துப்பிய கணவன்

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில், குடும்ப தகராறில் மனைவியுடன் சண்டையிட்டபோது, கோபத்தில் செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்ட மலைப்பாம்பின் தலையை கணவன் கடித்து துப்பியதற்காக கைது செய்யப்பட்டார்.

மியாமி-டேட் மாவட்டத்தின் கட்லர் விரிகுடா பகுதியில் கடந்த திங்கட்கிழமை இந்த சம்பவம் நடந்தது.

கெவின் மயோர்கா (32) என அடையாளம் காணப்பட்ட அந்த நபர் மீது, விலங்குகளை துன்புறுத்துதல், ஒரு அதிகாரியை தடுத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.

தம்பதி இடையே தகராறு

அடுக்குமாடி குடியிருப்பில் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததும் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். அங்கு, வீட்டுக்குள்ளே ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே சண்டை நடக்கும் சத்தத்தைக் கேட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டிற்குள் ஒரு பெண் அலறுவதைக் கேட்ட அதிகாரிகள் கதவை திறக்கச்சொல்லி பலமுறை கட்டளையிட்டுள்ளனர். ஆனால், அவர்கள் அதை கேட்காததால் கதவை உதைத்து திறந்தனர். அந்த நேரத்தில் மயோர்கா ஒரு கதவுக்குப் பின்னால் ஒளிந்திருந்தார்.

அவரைக் கைது செய்ய முயன்றபோது அவர் எதிர்த்ததாகவும், ஒரு அதிகாரியின் முகத்தில் கைவிலங்குக் கையால் தாக்கியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் அவரை கட்டுப்படுத்திய பொலிஸார், ஒரு அசாதாரண காட்சியை கண்டனர்.

பாம்பு தலை துண்டிப்பு

மயோர்கா தனது செல்லப்பிராணியான மலைப்பாம்பின் தலையைக் கடித்துவிட்டதாக மனைவி அதிகாரிகளிடம் கூறினார் பாம்பு துண்டிக்கப்பட்ட தலையுடன் கதவுக்குப் பக்கத்தில் கிடந்ததைக் கண்டபோது அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து, பொலிசார் அவர் மீது வழக்குப்பத்திவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.