அமெரிக்காவில் 24 வயது பெண்ணொருவர் 85 வயது முதியவரை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
61 வயது வித்தியாசம்
மிஸிஸிப்பியின் ஸ்டார்வில்லேவைச் சேர்ந்த இளம் பெண் மிராக்கிள் போக்(24). இவர் கடந்த 2019ஆம் ஆண்டு சலவைக் கடையில் பணிபுரிந்துள்ளார்.
அப்போது சார்லஸ் போக் (85) என்ற நபரை சந்தித்துள்ளார். இருவரும் நட்பாக பழகத் தொடங்கியுள்ளனர். தனது தாத்தாவை விட சார்லஸ் 10 வயது மூத்தவர் என்பதை மிராக்கிள் பின்னாளில் அறிந்து கொண்டார். இருவருக்கும் வயது வித்தியாசம் 61 ஆகும்.
காதல் திருமணம்
2020ஆம் ஆண்டில் சார்லஸ் தனது காதலை மிராக்கிளிடம் தெரிவித்துள்ளார். அதற்கு அவரும் சம்மதம் தெரிவிக்கவே, கடந்த கோடையில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

தனது கணவர் குறித்து ஊடகத்திடம் மிராக்கிள் கூறுகையில், ‘நாங்கள் ஒருவரையொருவர் எங்கள் பிறந்த திகதியை கேட்டபோது உரையாடலில் கண்டுபிடித்தேன். அவர் 1937யில் பிறந்தார் என்று கூறினார். நான் அவருடைய வயதைக் குறிப்பிடவில்லை. அது எப்படி இருந்தது என்பதைப் பார்க்க விரும்பினோம்.


அவர் 100 அல்லது 55 வயதாக இருந்தாலும் எனக்கு கவலையில்லை, அவருக்காக நான் அவரை விரும்புகிறேன். அவர் மிகவும் அழகாக இருப்பதால் அவருக்கு வயது 60 அல்லது 70 இருக்கலாம் என்று நான் நினைத்தேன். அவர் எப்போதும் எழுந்து சுறுசுறுப்பாக இருப்பார்’ என தெரிவித்துள்ளார். தங்கள் உறவுக்கு தனது குடும்பம் தொடக்கத்தில் இருந்தே ஆதரவாக இருந்ததாக மிராக்கிள் குறிப்பிட்டார்.