உயர்தர பரீட்சை மண்டபத்தில் அநாகரிகமாக ஏசிய கண்காணிப்பாளர்; மாணவி பொலிஸில் முறைப்பாடு!

0
128

உயர்தர பரீட்சை மண்டபத்தில் விடையெழுதுவதற்கு தாள் தருமாறு கேட்டபோது பரீட்சை நிலைய கண்காணிப்பாளர் அதை மறுத்ததுடன், அநாகரிகமாக பேசியதாக மாணவியொருவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

மாத்தளையிலுள்ள தேசிய பாடசாலையொன்றின் உயர்தரப் பரீட்சை நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.

 மாணவி முறைப்பாடு

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட உயர்ததர பரீட்சைக்கு தோற்றிய மாணவியே இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.

விடை எழுதிக் கொண்டிருந்த மாணவி ஒருவர் மண்டபத்தில் கண்காணிப்பாளராக கடமையாற்றிய ஆசிரியை ஒருவரிடம் பதில் எழுதுவதற்கு தாள் கேட்டுள்ளார்.

அதற்கு, “இவளுக்கு ஏன் இவ்வளவு பேப்பர்கள்” என ஆசிரியை பதில் அளித்ததாக தெரிவித்த மாணவி ஆசியையின் பதிலால் அதிர்ச்சியடைந்து விடைகளை மறந்து விட்டதனால் தன்னால் சரியாக பரீட்சைக்கு தோற்ற முடியவில்லையென்றும் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.