பிரம்மாண்ட இயக்குனராக தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இடத்தினை பெற்றிருப்பவர் இயக்குனர் சங்கர். அவரது இரண்டாம் மகளான அதிதி சங்கர் டாக்டர் படிப்பை முடித்துவிட்டு சினிமா மீது ஆர்வம் கொண்டிருந்தார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பிரம்மாண்ட முறையில் தன் மகள் அதிதி சங்கரை சினிமாவில் அறிமுகப்படுத்தியதோடு தன்னுடைய உதவி இயக்குனர் முத்தையா இயக்கிய விருமன் படத்தில் நடிகர் கார்த்தி-க்கு ஜோடியாக நடிக்க வைத்தார்.

படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதோடு சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் நடிக்க கமிட்டாகினார்.
தற்போது படங்களில் கமிட்டாகி வருவது ஒரு பக்கம் இருந்தாலும் இணையத்தில் ஆக்டிவாக இருந்து போட்டோஷூட் எடுத்து பகிர்ந்தும் வருகிறார். தற்போது மஞ்சள் நிற டிரான்ஸ்பெரண்ட் சேலையில் க்யூட்டாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.