இலங்கையில் புதிய சொகுசு ரயில் சேவை! டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

0
86

இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து பதுளை வரை புதிய சொகுசு புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சொகுசு புகையிரத சேவை பெப்ரவரி 14 ஆம் திகதி முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வழங்கப்படவுள்ளது.

இந்த ரயில் சேவை பிரதி செவ்வாய்கிழமைகளில் கொழும்பில் இருந்து காலை 5.30 மணிக்கு புறப்பட்டு எல்ல ஊடாக மாலை 4.00 மணிக்கு பதுளையை அடைந்து மறுநாள் காலை 6.00 மணிக்கு புறப்பட்டு மாலை 6.00 மணிக்கு கொழும்பை அடையும்.

இலங்கையில் புதிய சொகுசு புகையிரத சேவை! டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா? | New Luxury Train Service Sri Lanka Tickets Cost

இந்த ரயிலில் பயணம் செய்வதற்கான டிக்கெட் விலை $99.99 ஆகும்.

மேலும், பணத்திற்கேற்ற சிறந்த அனுபவமும் சேவையும் கிடைக்கும் என்றும் நட்சத்திர வகுப்பில் காலை உணவு, மதிய உணவு மற்றும் தேநீர் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.