விமானத்தில் அரைநிர்வாணமாக திரிந்த பெண்!

0
301

இத்தாலியை சேர்ந்த பாவ்லோ பெருசியோ என்பவர் அபுதாபியில் இருந்து மும்பைக்கு செல்லும் விமானத்தில் எகானமி பிரிவில் பயணம் செய்ய டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார்.

தொடர்ந்து விமானம் புறப்பட்டவுடன் அவர் தனக்கு பிசினஸ் வகுப்பில் இருக்கை தரவேண்டும் என கூறி விமான பணியாளர்களுடன் தகராறில் ஈடுபட்டார்.

அதற்கு அவர்கள் மறுத்தபோது மதுபோதையில் இருந்த பாவ்லோ விமான பணியாளர்களை தாக்கியதாகவும் தெரிகிறது.

அதன் பிறகு தனது ஆடைகளை கழற்றிவிட்டு அரைநிர்வாணமாக அவர் விமானத்தில் சுற்றித்திரிந்தார்.

இது குறித்து விமானி பாதுகாப்பு அமைப்புகளுக்கு தகவல் அளித்தார். அதன் பேரில் விமானம் தரையிறங்கியதும் மும்பை பொலிஸார் பாவ்லோ பெருசியோவை கைது செய்தனர்.

விமானத்தில் அரைநிர்வாணமாக திரிந்த பெண் | Half Naked Woman On Plane

விமானங்களில் தொடர்ந்து நடைபெற்று வரும் இதுபோன்ற அத்துமீறல் சம்பவங்கள் விமான பயணிகள் மற்றும் ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக சஹார் காவல் நிலையத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரி விரிவாக விளக்கமிளித்தார்.

விமானத்தில் பயணம் செய்த பெண் பயணி அதிகாலை 2.30 மணியளவில் எகானமி வகுப்பில் இருந்து திடீரென்று எழுந்து வணிக வகுப்பிற்கு ஓடி வந்து அங்கே அமர்ந்தார்.

அவருக்கு உதவி தேவையா என்று விசாரிப்பதற்காக இரண்டு விமான பணிபெண்கள் அவரை அணுகினர். ஆனால் அந்த பெண் எந்த பதிலும் கூறாமல் இருந்ததால் அவருக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைக்குத் திரும்பும்படி கேட்டுக் கொண்டனர்.

அப்போது அந்த பெண் அவர்களைக் கத்த ஆரம்பித்தார் மற்றும் ஆக்ரோஷமான சைகைகளை செய்தார்.

அந்த பெண் தவறாக நடந்து கொள்வதைத் தடுக்க விமான பணிபெண்கள் முயன்றபோது அவர்களில் ஒருவரின் முகத்தில் குத்தியதாகவும் மற்றவர் மீது எச்சில் துப்பியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் மற்ற விமான ஊழியர்கள் திகைத்துள்ளனர். தங்கள் சக ஊழியர்களின் உதவிக்காக அவர்கள் விரைந்த போது ​​​​அந்தப் பெண் ஆடைகளை கழற்ற தொடங்கி உள்ளார்.

பெண் தனது ஆடைகள் சிலவற்றை அணியாமல் விமானத்தில் அங்கும் இங்குமாக நடக்கத் தொடங்கினார்.

அந்தப் பெண்ணை அடக்கி வைப்பதற்கு சிறிது நேரம் சலசலப்பு தொடர்ந்தது என்று அந்த அதிகாரி கூறினார் இறுதியாக அதிகாலை 4.53 மணியளவில் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும் அந்த பெண் விமானம் ஏர் விஸ்தாராவின் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.