முதல் முறையாக விஜய் தங்கையாகும் இலங்கை பெண்! பல கோடி ரசிகர்களை வென்ற ரீல்ஸ் வீடியோ

0
97

பிக் பாஸ் சீசன் 6 முக்கிய போட்டியாளராக இருந்த இலங்கை பெண் ஜனனி, அவருடைய ரீல்ஸ் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் சீசன் 6

பிக் பாஸ் சீசன் 6 பிரபல தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக சென்றது. இந்த போட்டியில் ஆரம்பத்தில் சுமார் 21 பிரபலங்கள் கலந்துக் கொண்டிருந்தார்கள்.

இதில் சுமார் 18 போட்டியாளர்கள் மக்களால் வாக்களிக்கப்பட்டு ஓட்டிங்கின் பிரகாரம் அதிரடியாக வெளியேற்றப்பட்டு வந்தார்கள். அதில் ஜிபி முத்து சில தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியேற்றபட்டார்.

இதனை தொடர்ந்து அமுதவாணன், கதிரவன் இருவரும் பணப்பெட்டி மற்றும் பணமூட்டையுடன் வெளியேற்றப்பட்டார்கள். இவர்களில் கதிரவன் இன்றைய தினம் பிரபல தொலைக்காட்சிக்கு பேட்டியொன்றைக் கொடுத்திருந்தார்.

அதில் தான் ஒரு பொழுதுப்போக்கிற்காக மட்டும் தான் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றாக அவர் கூறியுள்ளார்.

முதல் முறையாக விஜய் தங்கையாகும் இலங்கை பெண்! பல கோடி ரசிகர்களை வென்ற ரீல்ஸ் வீடியோ | Janani S Reels Video Goes Viral

எதிர்பாராத விதமாக வெளியேற்றப்பட்ட ஜனனி

இந்த நிலையில் கதிரவனை வாக்களித்து சுமார் 100 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்க வைத்த ரசிகர்கள் மனதிற்கு இது ஒரு பேரிடியாக விழுந்தது.

இதனை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் அசீமிற்கு அடுத்த படியாக ஓட்டிங்கில் இருந்தவர் தான் இலங்கை பெண் ஜனனி. இவர் பெரிய மீடியா பின்னணியிலிருந்து போகவிட்டாலும் இந்தியா நாட்டிற்கும் இங்குள்ள மக்களுக்கு புதிதாகவே இருந்தார்.

இவரின் தமிழை பிக் பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்கள் புரிந்துக் கொள்வதற்கு மிகவும் கஷ்டப்பட்டார்கள். இந்த நிலையில் எதிர்பாராத விதமாக இவர் வெளியேற்றப்பட்டார்.

விஜயின் 67 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம்

இதனை தொடர்ந்தும் இவர் பிஸியாக தான் இன்று வரை இருந்து வருகிறார். மேலும் விஜயின் 67 படத்தில் விஜயின் தங்கை கதாபாத்திரத்திலும் நடிக்கவுள்ளார் என உறுதியான தகவல்கள் தெரிவித்துள்ளது.

இது ஒரு புறம் இருக்கையில், இவர் தன்னுடைய சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவ்வாக தான் இருந்து வருகிறார். இவரின் ரசிகர்களுக்கு அவ்வப்போது ரீல்ஸ் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அவர் நடித்த விளம்பரங்கள் என பகிர்ந்து வருகிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் “விஜய் அண்ணாவிற்கு தங்கையாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது இறைவனின் அருள் என்றும், வரவர அழகாகி கொண்டு செல்கிறார்” என்றும் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.