கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் போதைப்பொருள் பயன்படுத்த அனுமதி

0
360

கனேடிய மாகாணமான பிரிட்டிஷ் கொலம்பியாவில், போதைப்பொருள் பயன்பாடு சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட ரீதியிலான பயன்பாட்டுக்காக ஒரு சிறு அளவிலான சட்டவிரோத போதைப் பொருட்களை வைத்திருக்க அனுமதி வழங்கப்படுகின்றது.

கனடாவில் முதல் தடவையாக இவ்வாறான ஓர் பரீட்சார்த்த நடைமுறை பிரிட்டிஸ் கொலம்பிய மாகாணத்தில் அறிமுகம் செய்யப்படுகின்றது.

கனடாவில் இந்தப் பகுதியில் போதைப் பொருள் பயன்படுத்த அனுமதி ? | B C Decriminalization Of Small Amounts Of Drugs

18 அல்லது அதற்கும் மேற்பட்ட வயதினை உடையவர்கள் 2.5 கிராம் எடையுடைய சட்டவிரோத போதைப் பொருட்களை வைத்திருக்க அனுமதி வழங்கப்படுகின்றது.

ஒபியோயிட், கொக்கேய்ன், மெதபிட்டமைன் மற்றும் எம்.டி.எம்.ஏ ஆகிய போதைப் பொருட்களை பயன்படுத்த அனுமதி வழங்கப்படுகின்றது.

பிரிட்டிஸ் கொலம்பியாவில், அண்மையில் சட்டவிரோத போதைப் பொருள் பயன்பாடு குறித்த சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டில் பொதுச் சுகாதார அவசரச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது முதல் இதுவரையில் 10000 பிரிட்டிஸ் கொலம்பிய பிரஜைகள் சட்டவிரோத போதைப் பொருள் பயன்பாடு காரணமாக உயிரிழந்துள்ளனர். 

இன்றைய தினம் முதல் பிரிட்டிஸ் கொலம்பியாவில் சட்டவிரோதமான போதைப் பொருட்கள் ஓர் சிறிய அளவில் பயன்படுத்துவதற்கு சட்ட ரீதியான அனுமதி வழங்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.