ஆயிரம் பேரின் வாழ்வில் ஒளியேற்றிய யூடியூப் பிரபலம்: குவியும் பாராட்டுகள்

0
431

யூடியூப் வலைஒளி பக்கத்தில் MrBeast என அறியப்படும் ஜிம்மி டொனால்ட்சன் என்ற அமெரிக்க இளைஞர் 1,000 பேர்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் கண் பார்வை திரும்ப உதவியுள்ளார்.

சனிக்கிழமை காணொளி ஒன்றை வெளியிட்ட ஜிம்மி டொனால்ட்சன் அதில் 1000 பேர்கள் கண்புரை அறுவை சிகிச்சை முன்னெடுத்துள்ளது தொடர்பில் பதிவு செய்துள்ளார்.

24 வயதேயான ஜிம்மி டொனால்ட்சன், டெஸ்லா வாங்கும் ஆசையை ஒருவருக்கு நிறைவேற்றி வைத்துள்ளதுடன் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நோயாளிகளுக்கு 10,000 டொலர் வரையில் அன்பளிப்பாக அளித்துள்ளார்.

மட்டுமின்றி பல்கலைக்கழக கட்டணத்தில் பெருந்தொகையை ஒருவருக்கு செலுத்தியுள்ளார். கண்புரை சிகிச்சைக்கு பின்னர் யாரை முதலில் பார்க்க வேண்டும் என ஒருவரிடம் வினவ இதுவரை தமக்கு எல்லாமுமாக இருந்த தமது மகனை முதன்முதலில் பார்க்க வேண்டும் என அந்த தந்தை குறிப்பிட்டு நெகிழ வைத்துள்ளார்.

இன்னொரு இளைஞருக்கு கண்புரை அறுவை சிகிச்சை முன்னெடுத்துள்ளதுடன் அவரது கல்லூரி படிப்புக்காக 50,000 டொலர் தொகை உதவியுள்ளார். வெறும் 10 நிமிட அறுவை சிகிச்சையால் கண்பார்வை பெறும் அளவுக்கு மட்டுமே உலகில் பலரது நிலை உள்ளது எனவும் தமக்கு அப்படியான ஒரு நிலை ஏற்பட்டதன் தாக்கம் தான் இந்த 1000 பேர்களுக்கு கண்புரை அறுவை சிகிச்சை எனவும் டொனால்ட்சன் குறிப்பிட்டுள்ளார்.

உலகம் மொத்தம் சுமார் 200 மில்லியன் மக்கள் கண்புரை பாதிப்பால் பார்வையை இழந்துள்ளனர் என அறிந்து அதிர்ந்து போனதாகவும் குறிப்பிட்டுள்ளார்.