நடுவழியில் பேருந்தை நிறுத்தி சாரதி செய்த செயல்: குவியும் பாராட்டுகள்

0
79

சுவிட்சர்லாந்தில், நடுவழியில் பேருந்தை நிறுத்திவிட்டு, சாரதி ஒருவர் செய்த செயலுக்கு பாராட்டுகள் குவிகின்றன.

பற்றி எரிந்த வீடு 

ஜெனீவாவில் பேருந்து ஒன்று சாலையில் பயணித்துக்கொண்டிருந்தபோது, சாலையோரம் இருந்த வீடு ஒன்று தீப்பிடித்து எரிவதை அந்த பேருந்தின் சாரதி கவனித்துள்ளார்.  

உடனடியாக பெருந்தை நிறுத்திய அந்த சாரதி, ஓடோடிச் சென்று தீப்பற்றியெரியும் வீட்டுக்குள் துணிச்சலாக நுழைந்து அந்த வீட்டுக்குள் இருந்த முதியவர் ஒருவரையும் அவரது செல்ல நாய் ஒன்றையும் மீட்டுள்ளார்.

தீயணைப்புத்துறையினர் வரும்வரை அந்த முதியவரை கருத்துடன் கவனித்துக்கொண்ட அந்த சாரதிக்கு பாராட்டுகள் குவிகின்றன.