கொன்றுவிடுவேன் போரிஸ் ஜோன்சனை மிரட்டிய புடின்; கிரெம்ளின் மறுப்பு!

0
101

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தன்னை ஏவுகணை மூலம் கொன்றுவிடுவேன் என மிரட்டியதாக பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் குற்றம்சாட்டியுள்ள நிலையில் அதனை கிரெம்ளின் மறுத்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டிமிட்ரி பெஸ்கோவ், பொரிஸ் ஜோன்சன் கூறியது உண்மையல்ல எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக பிபிசி ஆவணப்படம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள பொரிஸ் ஜோன்சன்,

dmitry peskov

உக்ரைன் மீதான படையெடுப்பு பேரழிவை ஏற்படுத்தும் என்றும் அவ்வாறு செய்தால் ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகள் கடுமையாக இருக்கும் என புட்டினிடம் சுட்டிக்காட்டியதாகவும் அவர் கூறினார்.

இருப்பினும் உக்ரைன் நேட்டோவுடன் எந்த நேரத்திலும் சேரப்போவதில்லை என ரஷ்ய அதிபர் புட்டின் தெரிவித்தாக குறிப்பிட்டுள்ள பொரிஸ் ஜோன்சன், ஒரு கட்டத்தில் தன்னை புடின் அச்சுறுத்தியதாகவும் கூறியுள்ளார்.   

கொன்றுவிடுவேன் பொரிஸ் ஜோன்சனை மிரட்டிய புடின்; கிரெம்ளின் மறுப்பு ! | Putin Threatened To Kill Boris Johnson