தலைநகர் கொழும்பில் ஏற்படவுள்ள பல மாற்றங்கள்..

0
102

தலைநகர் கொழும்பில் ஏற்படவுள்ள பல மாற்றங்கள் கொழும்பு நகரின் நகர அபிவிருத்தி வேலைத்திட்டத்தை துரிதமாக பூர்த்தி செய்யுமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

கொழும்பு நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 55 உப அபிவிருத்தி செயற்றிட்டங்களும் இடம்பெறுகின்றன.

கொழும்பு மாநகர சபையின் ஒத்துழைப்பும் இதற்காக கிடைப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

நிலப் பூங்கா உட்பட பூங்காக்களை அபிவிருத்தி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கழிவுநீர் வெளியேற்றத்திற்கான நிர்மாணப் பணிகளும் பூர்த்தி அடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த வேலைத்திட்டங்களுக்கென இந்த ஆண்டில் 45 கோடி ரூபாவுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.