தமிழில் பிரபலமான நடிகராக வலம் வருபவர்தான் சரத்குமார். இவர் சமீபத்தில் நடிகர் விஜயுடன் இணைந்து தெலுங்கு இயக்குநர் வம்சியின் இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் நடித்து இருந்தார்.
குறித்த படம் பொங்கல் திருவிழாவையொட்டி வெளியான நிலையில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இவ்வாறான நிலையில், கடந்த சில நாட்களாக சரத்குமார், ராதிகா, வரலட்சுமி ஆகியோர் குடும்பத்துடன் இலங்கைக்கு சுற்றுலா சென்று அங்கு கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர்.

அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை அவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார்.
நடிகை வரலட்சுமி தமிழில் தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, நிபுணன், விஸ்மயா, சத்யா, காட்டு, மாஸ்டர் பீஸ், சண்டக்கோழி 2, சர்கார், இரவின் நிழல், பொய்க்கால் குதிரை என தொடர்ந்து படங்கள் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.