புலிகளின் குரல் ஜவானின் தந்தை உயிரிழப்பு!

0
64

இறுதி யுத்தத்தில் காணாமல்போன புலிகளின் குரல் வானொலிக்கு பொறுப்பாளராக இருந்த ஜவானின் தந்தை கந்தையா நாகரத்தினம் நேற்றையதினம் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

முல்லைத்தீவு முள்ளியவளை 2 ஆம் வட்டாரத்தில் வசித்து வந்த அவர் தமிழ் மண்ணின் விடுதலைப் போராட்டத்திற்காக தனது பிள்ளைகளில் 2 பிள்ளைகளை மாவீராக கொடுத்துள்ளார்.

முல்லைத்தீவு – முள்ளியவளையில் வசித்து வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். அதோடு இவர் முள்ளியவளை கட்டுவிநாயகர் கோவிலுக்கு சிறந்த தொண்டனாகவும் பக்தனாகவும் பணிபுரிந்தவர் ஆவார்.