ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழிற்கு விஜயம் செய்த வேளை ஜனாதிபதிக்கு எதிராக பேரணியை முன்னெடுத்த குற்றச்சாட்டில் வேலன் சுவாமிகள் கடந்த ஜனவரி 18ம் திகதி கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
பிணையில் விடுவிக்கப்பட்ட வேலன் சுவாமிகள் நாளைய தினம் (31) நீதிமன்றில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று வேலன் சுவாமி மற்றும் சட்டத்தரணி தவராசா ஆகியோர் யாழ் மாவட்ட மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்தனர்.

