திருமணமான மூன்றே நாளில் உயிரிழந்த புதுமாப்பிள்ளை! மனைவியை தேற்ற முடியாமல் தவித்த குடும்பம்

0
82

தமிழகத்தில் திருமணமான மூன்று நாளில் புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுமாப்பிள்ளை

சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். கார் ஓட்டுநரான இவருக்கு சோபனா (26) என்ற பெண்ணுடன் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், மாமியார் வீட்டிற்கு சென்றிருந்த அவர், நண்பர்களை சந்திக்க போவதாக கூறி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

பின்னர், மது போதையில் வீடு திரும்பிய நிலையில், செனாய் நகர் அருகே நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.

மரணம்

இதையடுத்து, படுகாயங்களுடன் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மணிகண்டன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது சடலத்தை மீட்ட பொலிசார் அதே மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதனிடையில் கணவர் இறந்த தகவலை அறிந்து சோபனா கதறி அழுததும், அவரை உறவினர்கள் தேற்ற முடியாமல் தவித்ததும் அங்கிருந்தவர்களின் கண்களை குளமாக்கியது.