குங்குமம் கீழே கொட்டி விட்டால் உடனே இதை செய்யுங்கள்!

0
73

குங்குமம் என்பது மங்களப் பொருட்களில் மிகவும் முக்கியமான, முதன்மையான பொருள். வீட்டில் எந்த விசேஷமாகட்டும் அல்லது எந்த கோவில் குளங்களுக்கு சென்றாலும் கூட பெண்களுக்கு முதலில் கொடுப்பது இந்த குங்குமம் தான்.

அந்தக் குங்குமம் சில சமயம் கை தவறி கீழே கொட்டுவது உண்டு. இது குடும்பத்திற்கு நல்லதா? கெட்டதா? இப்படி கொட்டி விட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதை எல்லாம் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

முதலில் குங்குமம் கை தவறி கீழே கொட்டி விட்டால் அது அபசகுனமான ஒன்று தான். குங்குமம் என்பது மங்களகரமான பொருள், அது கை தவறி கீழே கொட்டும் போது அபச குணத்தை தான் குறிக்கும். நாம் முடிந்த வரையில் குங்குமம், விபூதி மஞ்சள் போன்ற மங்களப் பொருட்களை எடுத்து கையாளும் போது மிகவும் கவனமாக செய்ய வேண்டும்.

இந்த மங்களகரமான குங்குமம் கைதவறி கொட்டி விட்டால் என்ன செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம். குங்குமம் தவறி கீழே கொட்டி விட்டால் முதலில் அதை எடுத்து தனியாக வைத்து விடுங்கள். அந்த இடத்தை ஈர துணி வைத்து சுத்தமாக துடைத்து அங்கு ஒரு சின்ன கோலம் ஒன்றை போட்டு விடுங்கள்.

குங்குமம் கீழே கொட்டி விட்டால் பயப்பட வேண்டாம்; உடனே இதை செய்தால் போதும்! | Don T Panic Saffron Spills Down Right Away

இப்படி செய்வதன் மூலம் தரையில் குங்குமம் கொட்டிய தோஷமானது நீங்கி விடும். அடுத்து எடுத்து வைத்த இந்த குங்குமத்தை தண்ணீரில் கரைத்து அதை செடி, கொடிகளுக்கு ஊற்றி விடுங்கள். அந்த குங்குமத்தை மறுபடியும் நாம் எந்த காரணத்தை கொண்டு பயன்படுத்திக் கூடாது.

இதை செய்த பிறகு வீட்டில் மஞ்சள் கலந்த தண்ணீரை கொண்டு தெளித்து விடுங்கள். இதற்கு கஸ்தூரி மஞ்சளை பயன்படுத்தினால் மிகவும் நல்லது. கஸ்தூரி மஞ்சள் இல்லாத பட்சத்தில் நீங்கள் பயன்படுத்தும் சாதாரண மஞ்சளை கூட தண்ணீரில் கலந்து வீடு முழுவதும் தெளித்து விடலாம். இப்படி செய்வதன் மூலம்இப்படி செய்வதன் மூலம் குங்குமம் கொட்டியதால் ஏற்பட்ட வீட்டு தோஷமும் நிவர்த்தி ஆகிவிடும்.

இவையெல்லாம் செய்த பிறகு குடும்பத் தலைவரின் பெயரில் அருகில் உள்ள ஆலயத்திற்கு சென்று ஒரு அர்ச்சனை செய்து விடுங்கள். குங்குமம் கைத்தவறி கொட்டுவதே நமக்கு வரும் ஏதோ ஒரு ஆபத்தை உணர்த்துவதற்காக தான். இந்த மூன்று விஷயங்களையும் உடனடியாக செய்து விட்டால் இதன் மூலம் வரும் ஆபத்து தோஷம் எதுவாக இருந்தாலும் அது விலகி விடும் என்று சொல்லப்படுகிறது.

இந்த பரிகாரங்களில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் இது போன்ற சமயங்களில் நீங்களும் இந்த மூன்று விஷயங்களை செய்து கொள்ளுங்கள்.