கனேடிய சட்டத்தரணியின் சிறுநீரக தானம்; குவியும் பாராட்டு

0
79

கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பியாவைச் சேர்ந்த பெண் சட்டத்தரணியொருவர் யார் என்றே தெரியாத நபர் ஒருவருக்கு தனது ஓர் சிறுநீரகத்தை தானமாக வழங்கியுள்ளார்.

சட்டத்தரணியின் இந்த உயரிய பண்பு அனைவரினாலும் பாராட்டப்பட்டு வருகின்றது. கரோலின் புருக்ஹோல்டர் ஜேம்ஸ் என்ற பெண் சட்டத்தரணியே இவ்வாறு தனது சிறுநீரகத்தை தானமாக வழங்கியுள்ளார்.

வாழ் நாளில் என்றுமே சந்திக்காத நபர் ஒருவரின் உயிரை காப்பாற்ற இந்த சட்டத்தரணி தனது சிறுநீரகத்தை தானமாக வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறுநீரக தானம் பெற்றுக்கொள்ள பெரும் எண்ணிக்கையிலானவர்கள் காத்திருப்பதாக சட்டத்தரணி கரோலின் தெரிவிக்கின்றார்.

உயிருடன் இருக்கும் போதே உடல் உறுப்பு தானம் செய்வதில் பெருமகிழ்ச்சி அடைவதாக அவர் குறிப்பிடுகின்றார்.

யார் என்றே தெரியாதவர்களுக்கு உடல் உறுப்புக்களை தானமாக வழங்குவதில் பெரு மகிழ்ச்சி ஏற்பட்டதாகவும் இதனை ஏனையவர்களும் செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கரோலினின் சிறுநீரகம் வின்னிபிக்கைச் சேர்ந்த ஒருவருக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது. கரோலினின் இந்த செயல் அனைவரினாலும் பாராட்டப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.