பெரு நாட்டில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 25 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுற்றுலா பேருந்து
தென் அமெரிக்க நாடான பெருவில் சுற்றுலா பேருந்து ஒன்று 60 பயணிகளுடன் சென்றது. லிமாவில் இருந்து Tumbes-க்கு அந்த பேருந்து பயணித்தது.
குறித்த பேருந்து பியூரா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து குன்றின் மீது இருந்து 160 அடி பள்ளத்தில் விழுந்து விபத்திற்குள்ளானது.
25 பேர் பலி
இதில் 25 பேர் உயிரிழந்ததாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் காயமடைந்த நபர்கள் தலாராவில் உள்ள உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

வாகனத்தின் பக்கவாட்டில் மனித உடல்கள் சிதறிக் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த காலங்களில் பெருவில் சாலை விபத்துக்கள் அதிகளவில் நிகழ்ந்து வருகிறது.
குறிப்பாக 2016ஆம் ஆண்டில் மட்டும் 2,500 பேர் போக்குவரத்து விபத்துகளில் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.