நான் அவருக்கு 65வது மனைவி..மோஸ்ட் வான்டட் பட்டியலில் இருந்த தேவாலய தலைவரின் உண்மை முகம்!

0
89

தேவாலயத்தின் தலைவர் மற்றும் FBI இன் பத்து மோஸ்ட் வான்டட் பட்டியலில் இருந்த வாரன் ஜெஃப்ஸ் 24 வயதுக்குட்பட்ட பல பெண்களை மனைவியாக்கி தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்து இருந்ததாக அவரது 65வது இளம் மனைவி பிரைல் டெக்கர் வெளிப்படுத்தியுள்ளார்.

18 வயதில் திருமணம்

FBI இன் பத்து மோஸ்ட் வான்டட் பட்டியலில் இருந்த அமெரிக்க வரலாற்றில் மிகவும் பிரபலமான வழிபாட்டுத் தலைவர்களில் ஒருவரான வாரன் ஜெஃப்ஸை 18 வயதில் திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று அவரது 65 வயது மனைவி பிரைல் டெக்கர் வெளிப்படுத்தியுள்ளார்.

பலதார திருமணம் செய்யும் மோர்மன் வழிபாட்டு முறையில் வளர்ந்த அனுபவங்கள் குறித்து கல்டிஷிடம் பேசிய பிரைல் டெக்கர், 2008ல் வாரன் ஜெஃப்ஸ் கைது செய்யப்பட்ட போது 70 க்கும் மேற்பட்ட மனைவிகளை கொண்டிருந்தார், அதில் பல பெண்கள் 24 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தேவாலயத்தின் தலைவராக இருந்த போது அவர் எங்களை மூளைச்சலவை செய்தார், சிறையில் அடைத்தார், அத்துடன் பாலியல் மற்றும் உடல் ரீதியான துஷ்பிரயோகங்களை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு செய்தார், இதன் விளைவாக அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.

பாடல்கள், புத்தகங்களுக்கு தடை

வாரன் ஜெஃப்ஸ் தேவாலயத்தின் அதிபராக இருந்த காலத்தில், தொலைக்காட்சிகள் தடை செய்யப்பட்டதாகவும், அவர்களால் எந்த திரைப்படங்களையும் பார்க்க முடியாது என்றும் வெளிப்படுத்தியுள்ளார்.

நான் அவருக்கு 65வது மனைவி.,மோஸ்ட் வான்டட் பட்டியலில் இருந்த தேவாலய தலைவரின் உண்மை முகம்! | Im 65Th Wife Of Notorious Cult Leader Warren Jeffs

அத்துடன் தேவாலயத்தின் கீழ் இருந்த குழந்தைகள் தங்களது இளமைக் காலத்தில் ஜெஃப்ஸை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற பயத்தில் கழித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். நான் அவருக்கு 65வது மனைவி.,மோஸ்ட் வான்டட் பட்டியலில் இருந்த தேவாலய தலைவரின் உண்மை முகம்! | Im 65Th Wife Of Notorious Cult Leader Warren Jeffs

யாராவது விதிகளை மீறினால் தவிர, வெளிப்புற இசையைக் கேட்டதாக எனக்கு நினைவில் இல்லை என்றும், புத்தகங்கள் கூட தடை செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

வாரன் ஜெஃப்ஸின் குடும்பத்தில் இருந்த போது இணையம் தடைசெய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.