செல்பி எடுக்க வந்து திடீரென தோள் மீது கை வைத்த மாணவர்.. தமிழ்ப்பட நடிகை கொடுத்த பதிலடி (வைரல் வீடியோ)

0
90

கேரளாவில் கல்லூரி ஒன்றில் நடிகை அபர்ணா பாலமுரளியிடம் மாணவர் ஒருவர் அத்துமீறிய சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது.

அபர்ணா பாலமுரளி

தமிழில் 8 தோட்டாக்கள், சர்வம் தாள மயம், சூரரைப் போற்று உள்ளிட்ட படங்களில் நடித்தவர் அபர்ணா பாலமுரளி.

இவர் தற்போது நடித்துள்ள Thankam என்ற மலையாள படத்தின் விளம்பரத்திற்காக, கேரளாவில் உள்ள கல்லூரி ஒன்றுக்கு சென்றுள்ளார்.

அங்கு அவர் மேடையில் அமர்ந்திருந்தபோது வந்த மாணவர் ஒருவர் செல்பி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

அத்துமீறிய மாணவர்

அபர்ணாவும் அதற்கு தயாராக நிற்க, பூ கொடுத்த அந்த மாணவர் சட்டென கையைப் பிடித்து விட்டார். மேலும் அவர் தோள் மீது கையை போட்டபோது, அதனை விரும்பாத அபர்ணா சிரித்தபடியே நழுவிக் கொண்டார்.

அபர்ணா பாலமுரளி/Aparna Balamurali

பின்னர் தவறாக நடந்து கொள்ளவில்லை எனக் கூறி மீண்டும் மேடை ஏறி வந்த குறித்த மாணவர், கை கொடுக்க வந்தபோது அபர்ணா மறுத்துவிட்டார். இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.