யாழில் வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் 5 பேர் அதிரடி கைது!

0
112

யாழ்.மருதனார் மடம் வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

காங்கேசன்துறை வீதியில் சுன்னாகம் – மருதனார் மடம் இடையே சினிமா பாணியில் விபத்தினை ஏற்படுத்தி வாள்வெட்டு மோதல் இடம்பெற்றிருந்தது.

யாழ்ப்பாணத்தில் செயற்படும் இரண்டு வாள்வெட்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டினால் மேற்படி மோதல் சம்பவம் பட்டப் பகலில் நடைபெற்றுள்ள நிலையில் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை தேடும் வேட்டையில் களம் இறங்கிய யாழ். மாவட்ட விசேட குற்றத் தடுப்புப் பிரிவு உப பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான குழு ஐந்து பேரை கைது செய்துள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய நிலையில் எதிர்வரும் 10ம் திகதிவரை அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.