நியூசிலாந்தின் ஆக்லாந்தில் பெய்த கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து அங்கு வானிலை அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆக்லாந்து விமான நிலையத்தை சுற்றிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளது.
இதனால், விமான பயணிகள் அனைவரும் அதிக சிரமத்திற்கு ஆளாகி இருக்கின்றனர்.

அவர்கள் நீரின் வழியே நீச்சல் அடித்து செல்லும் நிலை காணப்படுகிறது. இது பற்றிய வீடியோக்களையும் பயணிகள் பலர் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த சூழலால் ஆக்லாந்து விமான நிலையத்திற்கு வரவேண்டிய பல்வேறு விமானங்களும் காலதாமதத்துடன் இயக்கப்பட்டோ அல்லது ரத்து செய்யப்பட்டும் விடுகின்றன. பயணிகள் பலரும் இரவை விமான நிலையத்திலேயே கழிக்க கூடிய சூழலும் ஏற்பட்டு உள்ளது.

வெள்ளம் சூழ்ந்து ஒரு புதிய குட்டி தீவு போல் விமான நிலையம் காட்சியளித்தது. இதனால் பயணிகள் பலர் வீட்டுக்கு செல்ல முடியாமல் குழம்பி தவித்த நிலையில், 2 ஆயிரம் பேர் வரை ஒருநாள் இரவை ஆக்லாந்து விமான நிலைய முனையங்களிலேயே அதன் பின்னர் வாகன சேவைகள் இயக்கப்பட்டு பயணிகள் வீடுகளுக்கு திரும்பியதாக தெரிவிக்கப்படுகின்றது.
