செல்பி எடுக்க வந்த ரசிகர்; கடுப்பில் போனை தூக்கி எறிந்த பிரபலம் (வைரல் வீடியோ)

0
93

ரசிகரின் செயலை பார்த்து கோபமான ரன்பீர் அவரது போனை வாங்கி எறிந்துள்ளார்.

ரன்பீர்

பாலிவுட் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வருபவர்கள் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியாபட். இவர்கள் இருவரும் நீண்ட காலமாக ஒருவரையொருவர் காதலித்து வந்தனர்.

சமீபத்தில் இவர்கள் இருவரும் தங்களது நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் முன்னிலையில் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டனர். திருமணமான இரண்டு மாதத்தில் கர்ப்பமாக இருப்பதாக தனது சமூல வலைதள பக்கங்களில் அறிவித்தார் ஆலியா.

அதற்கு பல பேர் கிண்டலாக கமெண்ட் செய்து வந்தனர். எதற்கும் செவி சாய்க்காமல் திருமணத்திற்கு பிறகும் நடித்து வந்தார்.அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

வைரல் வீடியோ

இந்நிலையில் தற்போது ரன்பீர் உடன் செல்பி எடுக்க ரசிகர் ஒருவர் பலமுறை முயற்சிக்கிறார். ரசிகரின் செயலை பார்த்து கோபமான ரன்பீர் அவரது போனை வாங்கி தூக்கி எறிந்துவிடுகிறார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.