15 வயதுடைய காதலியின் வீட்டிற்குள் நுழைந்து மின் துண்டிக்கப்படும் வரை படுக்கையின் அடியில் இருந்த காதலன் சிக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மின் துண்டிக்கப்பட்ட சமயத்தில் காதலியுடன் உல்லாசமாக இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. கல்கிரியாகம சேர்ந்த காதலனை நையப்புடைத்த சிறுமியின் தந்தை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.
15 வயதான சிறுமிக்கும் இளைஞருக்குமிடையில் வட்ஸ்அப் வழியாக காதல் மலர்ந்துள்ளது.
சிறுமியிடம் கைத்தொலைபேசி இல்லாத நிலையில் தாயாரின் கைத்தொலைபேசியில் காதல் உறவை வளர்த்து வந்த நிலையில் சிறுமியின் தாயார் அதை அறிந்துள்ளார்.

காதல் உறவை நிறுத்துமாறு தாயார் பலமுறை எச்சரித்தும் சிறுமி காதலுக்கு அடிமையாகியிருந்தார்.
நேற்று முன்தினம் மாலை சிறுமியின் வீட்டிற்குள் இரகசியமாக நுழைந்த சந்தேக நபர் மின்சாரம் துண்டிக்கப்படும் வரை சிறுமியின் படுக்கைக்கு அடியில் பல மணிநேரம் தங்கியிருந்துள்ளார்.
இரவு, 9:00 மணியளவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதையடுத்து மறைவிலிருந்து வெளிப்பட்டு கட்டிலில் காதலியுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
மீண்டும் 10 மணியளவில் மின்சாரம் வந்ததையடுத்து மீண்டும் படுக்கைக்கு அடியில் சென்றதாக சந்தேகநபரின் வாக்குமூலங்களில் இருந்து தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

வீட்டிலிருந்தவர்கள் உறக்கத்திற்கு சென்ற பின்னர் மீண்டும் மறைவிலிருந்து வெளிப்பட்டு காதலியுடன் சல்லாபித்துள்ளார்.
அதிகாலை 3 மணியளவில் சிறுமியின் தந்தைக்கு விழிப்பு ஏற்பட்டு தண்ணீர் குடிக்க வந்த போது சிறுமியின் படுக்கை அறைக்குள் சத்தங்கள் கேட்டபடியிருந்தன. இதனால் சந்தேகமடைந்த தந்தை சிறுமியின் அறைக்கதவை தட்டியுள்ளார்.
காதலன் மீண்டும் படுக்கைக்கு அடியில் மறைந்துள்ளார். சிறுமியின் தந்தை அறைக்குள் தேடுதல் நடத்திய போது மறைந்திருந்த காதலன் கண்டுபிடிக்கப்பட்டார்.
அவரை நையப்புடைத்த சிறுமியின் தந்தை கதிரையில் கட்டி வைத்து விட்டு இளைஞனின் பெற்றோருக்கு அறிவித்தார். பொலிசாருக்கும் தகவல் வழங்கினார்.
இளைஞனின் பெற்றோர் அங்கு வந்த பின்னர் பொலிசாரிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார். இளைஞனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் காதலியுடன் உடலுறவு கொண்டதை காதலன் ஏற்றுக் கொண்டார். சிறுமியுடன் உறவு கொண்டதால் அவர் பலாத்கார குற்றச்சாட்டை எதிர்கொள்கிறார்.