மணமகனின் காதை கடித்து துப்பிய மணமகள்! இலங்கையில் சம்பவம்

0
87

கம்பளையில் திருமணம் முடிந்து 3 நாட்கள் கழித்து வீட்டுக்கு திரும்பிய மணமகன் நண்பர் ஒருவருடன் சேர்ந்து பீர் அருந்திக் கொண்டிருந்த போது மணமகள், மணமகனை தாக்கி அவரது காதைக் கடித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கணவனை தாக்கிய மனைவி, கணவனின் உடலைக் கீறி காயப்படுத்தியதாகவும், மணமகனின் சகோதரியையும் காயப்படுத்தியதாகவும், அத்தை மற்றும் மாமாவை திட்டிவிட்டு மணமகளின் திருமண மோதிரத்தை கழற்றி வீசிவிட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணமகனும், மணமகளும் 7 ஆண்டுகள் காதல் செய்து வந்த நிலையில் அவர்கள் அண்மையில் திருமணம் செய்து கொண்டதாக கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.

4 நாட்களை தேனிலவில் கழித்த இருவரும் கலஹாவில் உள்ள மணமகன் வீட்டிற்குத் திரும்பியுள்ளனர். அங்கு மணமகன் மணமகனின் நண்பரை சந்தித்து இருவரும் பீர் குடித்துள்ளனர்.

இதனால் மணமகன் வீட்டிற்குள் வர அரை மணி நேரம் தாமதமாகிய நிலையில் கடும் ஆத்திரமடைந்த மணப்பெண், வீட்டுக்கு வந்த மாப்பிள்ளையை திட்டி, அடித்தும், இரத்தம் வழியும் வரை காதை கடித்தும், நகத்தால் உடலை கீறியும் உள்ளார்.

இலங்கையில் மணமகனின் காதை கடித்து துப்பிய மணமகள்! அதிர்ச்சி சம்பவம் | Bride Bit Her Husband Ear And Spit Out Sri Lanka

இதன்பேது அவரை தடுக்க குறுக்கிட்ட மாப்பிள்ளையின் தாய், தந்தையை மணப்பெண் திட்டிவிட்டு மணமகனின் சகோதரியை தாக்கியுள்ளார்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.