தமிழ் முக்கியஸ்தர்களை கவிழ்க்க களமிறக்கப்பட்டுள்ள விஷக்கன்னிகள்!!

0
121
Shh! Women's secrets. Cropped shot of female with finger in mouth. Closeup portrait of young woman is showing a sign of silence with shhh written on the finger.

மகா அலெக்சாண்டர் மரணத்திற்கு பின்னால் ஒரு கதை இருக்கின்றது.

அவர் இந்தியா நோக்கிப் படையெடுத்தபோது பாலியல் நோய்களுக்கு உள்ளாகியிருந்த அழகான சில பெண்களை அவருடன் உறவாடவைத்து, திட்டமிட்டு அவருக்கு பாலியல் நோயைப் பரப்பியதாலேயே அவருக்கு மரணம் ஏற்பட்டதாக கூறுவார்கள்.

அப்பொழுது வட இந்தியாவில் இருந்த மௌரிய சாம்ராஜ்யத்தை அலெக்சாண்டருடன் நட்பு பாராட்டவைத்து, அந்த நட்பின் அடிப்படையில் அவருக்கு பாலியல் நோயைப் பரப்பி அவரை அழிக்கும் சதியைச் செய்தவர் இந்தியாவின் மிகப் பெரிய இராஜந்திரி என்று அழைக்கப்படுகின்ற சாணக்கியர்.

மற்றவர்களை அழிப்பதற்காக தமது உடலில் பாலியல் நோய்களுடன் நடமாடும் பெண்களை ‘விஷசக்கன்னிகள்’ என்று அழைக்கின்றார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.

இதுபோன்ற செயல்கள் ஆங்கிலத்தில் ‘Honey trap’ என்று அழைக்கப்படுகின்றன.

இதேபோன்று கனடா டொரன்டோவில் சில புலம்பெயர் பிரபலங்களை உறவாடிக் கவிழ்க்க சில ‘விஷக்கன்னிகள்’ களமிறக்கப்பட்டுள்ளதாக கனடா தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு சில பெருவர்த்தகர்கள், அரசியல் புள்ளிகள் அந்த’விஷக்கன்னிகளால்’ கவிழ்க்கப்பட்டதாகவும், அந்த ‘விசக்கன்னி’களை ஏற்பாடு செய்தவருக்கு தற்பொழுது பெரும் தொகைப் பணத்தை அவர்கள் கப்பமாக வழங்கிவருவதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.

இலங்கையில் இருந்து கனடா சென்று திருப்பிய ஒரு அரசியல்வாதியும் ஒரு ‘Honey trap’ இல் மாட்டுப்பட்டுள்ளதாகவும் மற்றொரு செய்தி இரகசியமாகப் பரவுகின்றது.

கனடா வாழ் செல்வந்தர்களே!!.. இலங்கையில் இருந்து கனடா செல்லும் அரசியல் பிரபலங்களே!!.. கனடாவில் இரகசியமாக நீங்கள் பழகும் பெண் ஒருவேளை ஒரு ‘விஷக்கன்னியாக’ இருக்கலாம்.

கவனம்!!