யாழ் வந்த ஜனாதிபதிக்கு எதிர்ப்பு; மேலும் இருவருக்கு அழைப்பாணை!

0
232

தேசிய பொங்கல் விழாவிற்கு யாழ்ப்பாணம் வந்த ஜனாதிபதி ரணிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் மேலும் இருவருக்கு நீதிமன்ற அழைப்பாணை கையளிக்கப்பட்டுள்ளது.

போராட்டம் தொடர்பில் கடந்த 17ஆம் திகதி தவத்திரு வேலன் சுவாமிகளை பொலிஸார் கைது செய்து, விசாரணைகளின் பின்னர் யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து, அவருக்கு பிணை வழங்கப்பட்டு வழக்கு எதிர்வரும் 31ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

யாழ் வந்த ஜனாதிபதிக்கு எதிர்ப்பு; மேலும் இருவருக்கு அழைப்பாணை! | Opposition To The President Who Arrived In Jaffna

இந்நிலையில், வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க வவுனியா மாவட்ட செயலாளர் சிவானந்தம் ஜெனிட்டா மற்றும் யாழ்.பல்கலைக்கழக மாணவன் மனோகரன் சோமபாலன் ஆகிய இருவரையும் 31ஆம் திகதி மன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு எதிராக சட்டவிரோதமான கூட்டத்தில் உறுப்பினராக இருந்தமை, பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் பொலிஸார் மீது கல் வீச்சு தாக்குதல் மேற்கொண்டு பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு காயம் ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டை பொலிஸார் முன் வைத்துள்ளனர். 

Gallery
Gallery