இலங்கையின் பெருமைகளை உலகிற்கு தெரியப்படுத்தும் இந்திய நடிகர்..

0
104

இந்திய சினிமா துறையின் மிகவும் பிரபலமான வில்லன் என அழைக்கப்படும் ஆஷிஷ் வித்யார்த்தி இலங்கை சுற்றுலா துறையை வளர்ச்சி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

அண்மையில் இலங்கை வருகைத்தந்த அவர் இலங்கையின் அழகிய இடங்களுக்கு பயணம் மேற்கொண்டு அதன் பெருமைகளை உலகிற்கு தெரியப்படுத்தியுள்ளார்.

Lets Lanka என்ற பெயரில் இலங்கைக்கு பயணித்த அவர் சீகிரியா உள்ளிட்ட பிரபலமான சுற்றுலா இடங்களுக்கு பயணித்துள்ளார். அத்துடன் காணொளிகள் ஊடாக இலங்கையின் அழகை உலகுக்கு தெரியப்படுத்தும் நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டுள்ளார்.

இலங்கை சுற்றுலா துறையை வளர்க்கும் இந்திய நடிகர் | Indian Actor Promoting Sri Lankan Tourism Industry

சிறிய கடைகளில் உணவு உட்கொண்டு, பானங்கள் பெற்றுக் கொண்டுள்ளதுடன் தமிழ் ரசிகர்களுடன் செல்பியும் எடுத்துள்ளார்.

இலங்கைக்கு வாருங்கள் எனவும் இலங்கையின் அழகை வந்து ரசிக்குமாறும் அவர் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களிடமும் சினிமா கலைஞர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை சுற்றுலா துறையை வளர்க்கும் இந்திய நடிகர் | Indian Actor Promoting Sri Lankan Tourism Industry

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையின் அந்நிய செலாவணியை ஈட்டும் துறைகளில் ஒன்றாக சுற்றுலாத்துறை உள்ளமை குறிப்பிடத்தக்கது.