எவ்வளவு தைரியம் இருந்தா என்னிடம் கேள்வி கேட்ப?நடிகையினால் அரங்கத்தில் அசிங்கப்பட்ட கோபிநாத்

0
188

நீயா நானா நிகழ்ச்சியில் புதிய சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் பழைய சின்னத்திரை பிரபலங்கள் என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.

நீயா நானா

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.

இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் சில காட்சிகள் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வாரம் எடுத்துக் கொண்ட தலைப்பு புதிய சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் பழைய சின்னத்திரை பிரபலங்கள் என்பதில் விவாதிக்கப்பட்டது.

இதில் புதிய சின்னத்திரை பிரபலங்களின் பக்கத்தில் இருந்த நடிகை ஒருவர் திடீரென ஏ கோபி எவ்வளவு தைரியம் இருந்தா என்னிடம் கேள்வி கேட்ப என்று ஆவேசமாக பேசியுள்ளார்.

இதனை சற்றும் எதிர்பார்க்காத சக பிரபலங்கள் அனைவரும் வாயடைத்துப் போயுள்ளனர். ஆனால் கோபிநாத் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் சிரித்துக்கொண்டு நிற்பது போன்ற ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.