யாழ்.கோப்பாயில் குடும்பஸ்தர் கொலை; மனைவி உள்ளிட்ட 11 பேர் கைது!

0
116

யாழ்ப்பாணம் – கோப்பாயில் குடும்பஸ்தர் ஒருவர் திட்டமிட்டு கொலை செய்த குற்றச்சாட்டில் அவரது மனைவி உள்ளிட்ட 11 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை (21-01-2023) இரவு கோப்பாயில் மோட்டார் சைக்கிள் திருத்தகம் நடத்தும் 30 வயதுடைய அஜித் என்பவர் கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த கோப்பாய் பொலிஸார், குடும்ப முரண்பாடே கொலைக்கு காரணம் எனக் கண்டறிந்துள்ளனர்.

இந்த நிலையில் குடும்பத்தலைவரை திட்டமிட்டு கொலை செய்த குற்றச்சாட்டில் அவரது மனைவி, மனைவியில் தந்தை உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.