முடிந்தால் 13வது திருத்தச் சட்டத்தை இல்லாமல் செய்யுங்கள்! ரணில் சவால்

0
109

13 ஆவது திருத்தச் சட்டம் ஏற்கனவே இலங்கையின் அரசியல் யாப்பில் இருக்கிறது. அதனை நடைமுறைப்படுத்த வேண்டியது ஜனாதிபதி என்ற அடிப்படையில் தன்னுடைய கடமை என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அதனை கட்டாயம் நிறைவேற்றியே ஆவேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, 13ஐ தான் நடைமுறைப்படுத்தாமல் இருக்க வேண்டுமாயின் நாடாளுமன்றத்தில் யாராவது 22 ஆவது மறுசீரமைப்பை கொண்டு வந்து 13 ஆவது திருத்தத்தை இல்லாமல் செய்யுங்கள் என்றும் சவால் விடுத்துள்ளார்.