மீண்டும் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் குதித்த டிரம்ப்!

0
112

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் (Donald Trump)-ன் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுவதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்புக்கான தடை நீக்கப்படுவதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

வன்முறையை தூண்டும் விதமாக சமூக ஊடகங்களில் பதிவிட்டதாக கூறி கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் டிரம்பின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் பக்கங்கள் முடக்கப்பட்டது.

இதனிடையே, கடந்த ஆண்டு டிவிட்டர் நிறுவனத்தை எலான் மாஸ்க்(Elon Musk) வாங்கியவுடன், டிரம்புக்கான தடையை டுவிட்டர் நிறுவனம் நீக்கியது.

இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் டிரம்புக்கான தடையை நீக்குவதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் டிரம்ப்பை(Donald Trump) பின் தொடரும் பயனாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.