இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்!

0
656

இந்தியாவின் 74-வது குடியரசு தினத்தை முன்னிட்டு கூகுள் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது. நாட்டின் 74-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது.

இந்திய அரசு சார்பில் குடியரசு தின விழா ஆண்டுதோறும் டெல்லியில் உள்ள ராஜபாதையில் கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு சென்டிரஸ் விஸ்டா திட்டத்தில் புனரமைக்கப்பட்ட கடமையின் பாதையில் (முன்பு ராஜபாதை) குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது.

ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசிய கொடியை ஏற்றுகிறார்.விழா காலை 8 மணிக்கு தொடங்கியது. அணிவகுப்பு, கடமையின் பாதையில் ஜனாதிபதி மாளிகை அருகே தொடங்கி விஜய் சவுக், இந்தியா கேட் வழியாக செங்கோட்டை வரை செல்லும். குடியரசு தினத்தையொட்டி ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டு தலைவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வது வழக்கம்.

குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்! | Google Released A Special Occasion Of Republic Day

அதன்படி இந்த ஆண்டுக்கான விழாவில் எகிப்து அதிபர் அப்தெல் பட்டா எல் சிசி கலந்து கொள்கிறார். இந்த நிலையில் இணைய தேடு பொறி நிறுவனங்களில் முதன்மை நிறுவனமான கூகுள் நிறுவனம், தனது டூடுல் அமைப்பை அந்த நாளின் சிறப்புக்கு ஏற்றார் போல் மாற்றி அமைத்து வருகின்றது.

அந்த வகையில் உலகின் மிக பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் குடியரசு தினவிழாவினை பிரதிபலிக்கும் வைகயில் கூகுள் நிறுவனம் தனது டூடுல் அமைப்பை மாற்றி உள்ளது.

அதில் குடியரசு தின அணிவகுப்பின் பல்வேறு கூறுகள் இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி மாளிகை, இந்தியா கேட், மோட்டார் சைக்கிள் சாகசம் உள்ளிட்டவை சிக்கலான கையால் வெட்டப்பட்ட காகிதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது போல் இடம்பெற்றுள்ளது.