விஜய் மற்றும் சங்கீதா விவாகரத்து ஆகிவிட்டதா! மேனேஜர் சொன்னதை உடைத்த தயாரிப்பாளர்

0
69

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். அவர் நடிப்பில் வாரிசு படம் வெளியாகி மிகப்பெரிய வசூல் வேட்டையை செய்து வருகிறார்.

இதற்கிடையில் தன்னுடைய மனைவி சங்கீதாவை சில மாதங்களாக ஒதுக்கி வைத்து வருவதாகவும் சங்கீதா அவரது அப்பா வீட்டிற்கு சென்றுவிட்டார் என்றும் பல செய்திகள் வைரலாகியது.

இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகாத நிலையில், விஜய் கீர்த்தி சுரேஷ் எடுத்துக்கொண்ட புகைப்படமும் இணையத்தில் பகிரப்பட்டு விஜய்யை நெட்டிசன்கள் கலாய்த்து வந்தனர்.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கீர்த்தி சுரேஷ் வேறொருவரை 13 வருடங்களாக காதலித்து வருவதாகவும் 4 வருடங்களுக்கு பின் திருமணம் செய்யவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியது.

அதேசமயம், விஜய்யின் மேனேஜர் தரப்பில் அப்படியொரு வாய்ப்பே இல்லை என்று கூறும் விதமாக தயாரிப்பாளரும் நடிகரும் ஜேஎஸ்கே கோபி இணையத்தில் ஒரு பதிவினை பகிர்ந்து முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

இதற்கிடையில் விஜய்யின் மேனேஜர் ஜெகதீஷ் இருவரும் விவாகர்த்து பெறவில்லை என்று கூறியுள்ளாராம். இதை வைத்து விஜய் ரசிகர்கள் வதந்தி பரப்புபவர்களை கடுமையாக திட்டி வருகிறார்கள்.