அமெரிக்காவில் கோவிலை உடைத்து உண்டியலை கொள்ளையடித்த கொள்ளையர்கள்!

0
60

அமெரிக்காவில் கோவிலுக்குள் புகுந்த கொள்ளையர்கள் உண்டியலை தூக்கி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் பிராசோஸ் நகரில் ஸ்ரீ ஓம்கர்நாத் கோவில் உள்ளது. பிராசோஸ் நகரில் உள்ள ஒரே இந்து கோவில் இதுவாகும்.

பிராசோஸ் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் இந்து சமூகத்தினர் தினமும் இந்த கோவிலுக்கு வந்து வழிபாடு நடத்தி செல்வது வழக்கம்.

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு இந்த கோவிலுக்கு வந்த கொள்ளையர்கள் சிலர் ஜன்னலை உடைத்து கோவிலுக்குள் நுழைந்தனர்.

கோவிலுக்குள் புகுந்து உண்டியலை களவாடிச்சென்ற கொள்ளையர்கள்! | Robbers Broke Into The Temple And Looted Money Us

பின்னர் அவர்கள் கோவிலில் இருந்த உண்டியலையும், நகை உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்கள் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு பெட்டகத்தையும் தூக்கிக்கொண்டு தப்பி சென்றனர்.

இரவு நேரத்தில் கோவிலுக்குள் புகுந்து நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் அங்கு வாழும் இந்து சமூகத்தினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.